உயர்கல்வி பெற காத்திருக்கும் மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள நிலையில் போதிய வசதியற்ற மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கு இந்தக் கடன் வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு மாணவர் 11 லட்சம் ரூபாய்களை கடனாகப் பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கடனை அவர்கள் உயர் கல்வியை நிறைவு செய்து தொழிலுக்குச் சென்றதன் பின்னர் திருப்பிச் செலுத்த முடியும் என்றும் நிதியமைச்சு அறிவித்துள்ளது. (AV)
No comments