Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

7000 டெஸ்ட் ஓட்டங்கள் எட்டிய மெத்தியூஸ்




இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ‍அணித்தலைவரான எஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் அரங்கில் 7000 ஓட்டங்கள் என்ற மைல் கல்லை தொட்ட மூன்றாவது இலங்கையாராக பதிவானர்.

இதற்கு முன்னர் மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகிய இருவர் மாத்திர‍மே இந்த மைல் கல்லை கடந்தவர்கள் ஆவர். அத்துடன் இலங்கை சார்பாக அதிக டெஸ்ட் ஓட்டங்கள் பெற்ற மூன்றாவது வீரராக இருந்து வந்த முன்னான் ஜாம்பவான் சனத் ஜயசூரியவை பின்தள்ளினார் எஞ்சலோ மெத்தியூஸ்.

நியூஸிலாந்து அணிக்கெதிராக தற்போது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மெத்தியூஸ் 47 ஓட்டங்களை பெற்றிருந்தபோது இந்த மைல் கல்லை எட்டியிருந்தார்.

எனினும், டெஸ்ட் அரங்கில் தனது 39 ஆவது அரை சதத்தை பூர்த்தி செய்ய முடியாது அதே ஓட்ட எண்ணிக்கையில் ஆட்டமிழந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களை பெற்றவர்களாக குமார் சங்கக்கார (12400),மஹேல ஜயவர்தன (11814) திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எம்.சில்வெஸ்டர்)

No comments