Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

மண்முனை வடக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மீன்பிடி தோணிகள் வழங்கி வைப்பு

 கிராமத்துடன் உரையாடல் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினூடாக இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட  மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக மீன்பிடித் தோணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 227 தோணிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவினுள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு  48 தோணிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் இரண்டாம் கட்டமாக நேற்று வியாழக்கிழமை 09.03.2023ம் திகதி பெறுமதி மிக்க வாவித் தோணிகளும், கடல் தோணிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் தனிப்பட்ட செயளாலர் த.தஜிவரன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்ஷன், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் ஊடகச் செயலாளர் எம்.லிசோத்மன், மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




No comments