(வந்தாறுமூலை நிருபர்)
மட்/க.கு/வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியால (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்க விசேட பொதுக் கூட்டமானது பாடசாலை அதிபரும் பழைய மாணவர் சங்கத் தலைவருமான திரு.கி.சிவலிங்கராஜா அவர்களின் தலைமையில் 12/03/2023 ஞாயிற்றுக்கிழமை நேற்று மு.ப. 10.00 மணியளவில் வித்தியாலய விபுலானந்தர் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
முதலில் இரு நிமிட இறைவணக்கத்துடன் ஆரம்பமான விஷேட பொது கூட்டத்தில் தலைவரின் தலைமையுரை இடம்பெற்று செயலாளர் அவர்களினால் சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு தொடர்ந்து எமது பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு விளையாட்டுப் போட்டி சம்பந்தமாகவும் பாடசாலை முன் பக்க மதிலில் சுவர் ஓவியம் வரைவது தொடர்பாகவும் அதிபர் சபையின் முன்வைக்க பாடசாலை பழைய மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டு Batch மூலம் நிதி பெற்று தருவதாகவும் முடிவு எட்டப்பட்டதுதோடு தொடர்ந்து ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டன.
தொடர்ந்து செயலாளரின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
இக் கூட்டத்தில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ,பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments