ஈஸ்ட்டர் தற்கொலைத் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் மனைவி ஃபாதிமா ஹாதியாவுக்கு நான்கு ஆண்டுகளின் பின்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அவரது வழக்கு இன்று கல்முனை நீதமன்றில் விசாரணைக்கு வந்த போது, அவர் ஏற்கனவே 4 ஆண்டுகள் விளக்கமறியலில் இருந்தமையை கருத்திற்கொண்டு, நீதிபதி ஜெயராம் ட்ரொக்சி பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
அவர் 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 25 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு, அவரும், பிணை வழங்கியவர்களும் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அலுவலகத்தில் அவர் கையொப்பமிட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பபட்டுள்ளது.
இந்த வழக்கு மே மாதம் 17ம் 18ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (AV)
No comments