இங்கிலாந்துக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஈட்டிய பரபரப்பான வெற்றியின் மூலம் அடைந்த உத்வேகத்துடன் கிறைஸ்ட்சேர்ச்சில் ஆரம்பமாகவுள்ள இலங்கையுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து எதிர்கொள்ளும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
வெலிங்டனின் கடந்த வாரம் நடைபெற்ற மிகவும் பரபரப்பான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு ஓட்டத்தால் நியூஸிலாந்து வெற்றியீட்டியது.
இங்கிலாந்தின் தலைமை பயிற்றுநராக நியூஸிலாந்தின் முன்னாள் அணித் தலைவர் ப்றெண்டன் மெக்கலம் பதவியேற்ற பின்னர் இங்கிலாந்து அடைந்த 2ஆவது தோல்வி இதுவாகும்.
நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் நியூஸிலாந்துடன் இலங்கை விளையாடும் டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து, நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை முழுமையான வெற்றி வெற்றிபெற்றால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியவை எதிர்த்தாட தகுதிபெறும்.
ஆனால், அந்த இலக்கை அடையும் இலங்கையின் எதிர்ப்பார்ப்பை கடுமையாக்குவதற்கு டிம் சௌதீ எண்ணியுள்ளார். அது மட்டுமல்லாமல் இங்கிலாந்துடனான தொடரில் கிடைத்த உத்வேகத்துடன் இலங்கையுடனான தொடரை எதிர்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
‘டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பிரஸ்தாபிக்கும் மக்கள் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் 5 நாட்களும் பெருமளவில் கூடியிருந்தது மகத்தான விடயமாகும். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் பரபரப்பானது என்பதையும் அவர்கள் அறிந்துள்ளனர். அவ்வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்த முடியும் என்பதை இங்கிலாந்து உணர்த்தியுள்ளது. சகல வகையான கிரிக்கெட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்தான் பிரதானமானது என இங்கிலாந்து கருதுகிறது.
‘அந்த பரப்பான போட்டி குறித்து நீண்ட காலம் பேசப்படும். அவர்கள் உண்மையில் எளிமையான குழுவினர். இப்போது எமது கவனம் எல்லாம் இலங்கை பக்கம் திரும்பும். டெஸ்ட் சம்பியன்ஷிப்பிலிருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இலங்கையைப் பொறுத்த மட்டில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிறைய விளையாட வேண்டி உள்ளது’ என டிம் சௌதீ மேலும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, இரண்டு முக்கிய வீரர்கள் நியூஸிலாந்து அணியிலிருந்து சற்று விலகி இருக்கின்றனர்.
இங்கிலாந்தில் கடந்த வருடம் உபாதைக்குள்ளான கய்ல் ஜெமிசன் தொடர்ந்தும் சிகிச்சையுடன் ஓய்வுபெற்றுவருகிறார். முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் தனது பாட்டியின் மறைவை அடுத்து குடும்பத்தினருடன் டவ்ரங்காவில் தங்கி இருக்கிறார்.
கேன் வில்லியம்சன் பெரும்பாலும் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments