Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

முட்டையின் விலை குறைகிறது?

இந்தியாவில் இருந்து மேலும் ஒரு மில்லியன் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட இந்த முட்டை தொகுதி ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளுக்கு விநியோகிக்கப்படும் என அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

முன்னதாக இறக்குமதி செய்யப்பட்ட 2 மில்லியன் முட்டைகளும் பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. இந்தியாவில் இருந்து 30 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது, எதிர்காலத்தில் உள்ளூர் சந்தையில் தேவைக்கு ஏற்ப தேவையான முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என்று வலிசுந்தர கூறினார்.

இவ்வாறான பின்னணியில் நாட்டில் முட்டைகளின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.(AV)


No comments