(வவுனதீவு நிருபர்)
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்சினி முகுந்தன் (காணி) அவர்களின் பங்குபற்றுதலுடன், கிராமிய அபிவிருத்தி திட்ட அமைப்பின் இணைப்பாளர் திருமதி. ரஜனி ஜெயப்பிரகாரஸ் தலைமையில் நேற்று (15) திகதி இடம் பெற்றது.
வவுனதீவு சுற்று வட்டத்தில் இருந்து அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து ஊர்வலமாக மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்கு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இவ்வருடத்திற்கான சர்வதேச மகளிர் தின கருப்பொருளாக பாலின சமத்துவத்திற்கான புதுமையும் தொழில் நுட்பமும் தொடர்பாக அதிதிகளினால் கருத்து தெரிவிக்கப்பட்டதுடன் பெண்களினால் இசை, நடன, கவிதை மற்றும் சிறப்பு பேச்சுக்கள், வில்லுப்பாடல் போன்ற கலை நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டன.
மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் முன் மாதிரியான மகளிர் அமைப்பினை நிறுவுவதற்கு கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்விற்கு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன், உதவி பிரதேச செயலாளர் திருமதி.சுபா சுதாகரன், கிராமிய அபிவிருத்தி திட்ட அமைப்பின் பணிப்பாளர் வ.றமேஸ் ஆனந்த், எ.சொர்ணலிங்கம், மகளிர் அபிவிருத்த உத்தியோகத்தர் திருமதி.அருளாளினி சந்திரசேகரம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
No comments