இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெட்டின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 400 கிராம் பால்மா பக்கெட்டின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வார இறுதி விடுமுறையைத் தொடர்ந்து புதிய விலையுடன் கூடிய பால் மா பாக்கெட்டுகள் திங்கட்கிழமை சந்தைக்கு வெளியிடப்படும் எனப் பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(AV)
No comments