இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கவை தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகர இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
தேசிய விளையாட்டுப் பேரவையின் எந்தவொரு உறுப்பினரும் அர்ஜுன ரணதுங்கவின் தலைவர் பதவியை ஏற்கத் தயாராக இல்லை என அவர் அர்ஜுன ரணதுங்கவிடம் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.(DC)
No comments