Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

மட்டு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இடம்பெற்ற ஊடகச் செயலமர்வு


(மட்டக்களப்பு முகுந்தன்)


"ஊடக தர்மத்தை வலுப்படுத்துவதன் ஊடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல்" எனும் தொனிப் பொருளில் இரண்டு நாட்களைக் கொண்டமைந்த செயலமர்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

வெளிப்பாட்டு உரிமையும், நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் எனும் தலைப்பில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் LIFT மனிதாபிமான தொண்டு நிறுவனத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட  செயலமர்வும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று (28) திகதி மட்டக்களப்பு  மத்திய  கல்லூரி தேசிய பாடசாலையில்  இடம்பெற்றது.

HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் LIFT மனிதாபிமான தொண்டு நிறுவனத்தினரால் "ஊடக தர்மத்தை வலுப்படுத்துவதன் ஊடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல்" எனும் தொனிப் பொருளில் 900 இளைஞர், யுவதிகளை நேரடியாக நெறிப்படுத்தும் வண்ணம் இச்செயலமர்வானது நடாத்தப்பட்டு வருகின்றது.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே, கருத்துச் சுதந்திரம் மற்றும் வெறுப்புப் பேச்சுக்கு இடையே உள்ள மெல்லிய தடை கண்ணுக்குத் தெரியாத நிலையில் ஊடக சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் குறித்த செயலமர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, இரு நாட்களாக இடம்பெற்ற மேற்படி செயலமர்வின் வளவாளர்களாக ஊடகவியலாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களுமான அ.ஜனாத்தன், அ.சதுர்ஜனா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் தொடர்பான தெளிவுறுத்தல்களை வழங்கி இருந்தனர். நிறைவில் செயலமர்வின் இறுதி நாளன்று கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் பாஸ்கரன், LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி ஜானு முரளிதரன், நிதி உதவியாளர் கிறிஸ்டி உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

LIFT மனிதாபிமான தொண்டு நிறுவனத்தின் இந்த நிகழ்விற்கு பூரண அனுசரணையினை மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவு மற்றும் மனிதநேய தகவல் குறிப்புகள் (மதகு) நிறுவனம் ஆகியன வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை குறித்த இரு தினங்களிலும் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பாடசாலையிலும், தன்னாமுனை மியானி தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் தாழங்குடா உயர் தொழில்நுட்ப கல்லூரியிலும் இப்பயிற்சிச் செயலமர்வுகள் இடம்பெற்றதுடன் வளவாளர்களாக ஊடகவியலாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களுமான உ.உதயகாந்த் (ச.நீ), திருமதி.ம.றுக்சிகா, எஸ்.சஜீத், நல்லரெட்ணம் துஜோகாந்த், பீ.சபேஸ், பீ.டயசிங்கம்
உள்ளிட்ட Lift நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும், கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்

No comments