சீனாவுக்கு இலங்கை பால்மா ஏற்றுமதி செய்யவுள்ளதாக, பெலவத்தை பாலுற்பத்தி நிறுவனத்தின் தலைவர் ஆரியசீல விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஒருகாலத்தில் இலங்கைக்கு வருடாந்தம் 98 மில்லியன் கிலோ பால்மா இறக்குமதி செய்யப்பட்டுவந்தாலும், கடந்த சில வருடங்களாக அது வீழ்ச்சி கண்டு தற்போது 12 மில்லியான குறைவடைந்துள்ளது.
இதன்காரணமாக கடந்த காலங்களில் வருடாந்தம் 400 மில்லியன் டொலர்கள் வரையில் பால்மா இறக்குமதிக்காக செலவான போதும், தற்போது அது 50 மில்லியன் டொலர்களாக குறைவடைந்து நாட்டுக்கு 350 மில்லியன் டொலர்கள் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
அதேபோல உள்நாட்டிலும் பால் பண்ணையாளர்களுக்கு பால் லீற்றர் ஒன்றுக்கு 250 ரூபா வழங்கப்படுவதால், பால் விநியோகமும் 600 மில்லியன் லீற்றர்களைத் தாண்டியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் பால் மா தொடர்பாக இலங்கை தன்னிறைவடையும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் விரைவில் சீனாவுக்கு பால் மா ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(AV)
No comments