இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை, ஜூன் மாதம் மேலும் குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இறக்குமதி செய்யப்படும் பால் மா ஒரு கிலோ பொதியின் விலை 200 ரூபாவாலும், 400 கிராம் பொதி விலை 80 ரூபாவாலும் குறைக்கப்பட்டிருந்தது.
டொலர் பெறுமதி இழப்பின் காரணமாகப் பால் மா இறக்குமதி செலவுகள் குறைவடைந்துள்ள நிலையில், அவற்றின் விலைகளை மேலும் குறைக்க முடியும் எனப் பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும், புதிய விலைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(AV)
No comments