2022 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணையை மே மாதம் 29 ஆம் திகதி வரை தொடர்வதென இப்போதைக்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தார். புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.(AV)
No comments