Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

இன்று பொதுப்போக்குவரத்தில் சிரமம் ஏற்படலாம்

புத்தாண்டு தினத்தில் பேரூந்து போக்குவரத்து மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று காலை நோன்கடை ஆரம்பமாகவுள்ளதால் சுபநேரம் முடியும் வரை பேரூந்து சேவை மிகவும் கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் பயணிகளின் தேவையின் அடிப்படையில் மாத்திரம் கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பேரூந்துகள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

25 அல்லது 30 பேரூந்துகள் இயங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் ஓட்டப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.


மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தயாராக உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்(DC).


No comments