Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக நிறுத்துக - ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஆசிரியர் இடமாற்றங்களை தற்காலிகமாக நிறுத்துமாறு கொழும்பில் உள்ள பல பிரதான தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்துமூல கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு ரோயல் கல்லூரி உட்பட பல பாடசாலைகளின் அதிபர்கள் ஜனாதிபதியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இவ்வாறான ஆசிரியர் இடமாற்றங்கள் எந்தவொரு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகோல்களின் கீழும் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். அதிபர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், மாணவர்கள் முதலாம் தரத்திற்கு பிரவேசித்துள்ளமையும், கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப்பு பரீட்சை இன்னும் இடம்பெறாமை ஆகியவற்றினையும் மேற்கோள் காட்டி குறித்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..


முன்னதாக ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்ததுடன், ஆசிரியர் சங்கங்களின் தேவைக்கேற்ப ஆசிரியர் இடமாற்றங்களை நிறுத்தி முறைப்படி ஆசிரியர் இடமாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.(DC)



No comments