Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

வெப்பமான காலநிலை தொடரும்

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை, குருநாகல், மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னர் உள்ளடக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இதன் தாக்கம் சிறிதளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், பொதுமக்கள் முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வு எடுக்குமாறு வளமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும், இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது


No comments