நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அனுராதபுரம், குருணாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகளவான வெப்ப நிலை பதிவாகக்கூடும்.
திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, மாத்தளை, புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களும் அதிக வெப்ப நிலை எச்சரிக்கை பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நாட்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாகப் பொதுமக்கள் அதிகளவு நீரை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் எளிதில் நீரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சிறுவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வெளியில் அடிக்கடி நடமாடுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
No comments