Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

புத்தாண்டின் போது நகரங்களுக்கு வரும் மக்களுக்கு பொலிசாரின் அறிவுரை

புத்தாண்டுக்காக நகருக்கு வரும் மக்களின் பாதுகாப்புக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா, விசேட சுற்றிவளைப்புகளுக்காகவும் விசேட போக்குவரத்து கடமைகளுக்காகவும் நகரங்களைச் சுற்றி அதிகளவான அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நகரங்களுக்கு வரும் மக்கள் பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருக்கக் கூடும் என்பதால் அது குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் சுட்டிக்காட்டினார்.(DC)




No comments