Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

ரணிலின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது - ராஜித

நான் எவருக்கும் தேவையானவாறு அறிக்கைகளை வெளியிடமாட்டேன். ஜனாதிபதி பொருளாதாரத்தை மேம்படுத்த மாட்டாரெனக் கூறுவதற்கு 'நாம் குருடர்களா' என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார். நான் யாரும் கூறும் விதத்தில் அறிக்கைகளை வெளியிடத் தயாரில்லை. இன்றுள்ள பிரச்சினை கட்சியிலிருந்து செல்வதா இல்லையா என்பதல்ல. நாட்டை மேம்படுத்துவதா இல்லையா என்பதே. கொழும்பு ஸ்ரீமத் மாக்கஸ் பெர்னாந்து மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று 06 ஆம் திகதி ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது.

அங்கு ஊடகவியலாளரொருவர்​ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அண்மையில் ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் செல்லமாட்டோம் எனக்கூறி அறிக்கை விடுகின்றார்கள். போக மாட்டேன் என்று யாருக்கு சொல்கிறார்கள். நீங்கள் செல்வீர்கள் என அறிந்து கொண்டதால்தான் இதனை சொல்கிறார்களா என கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த ராஜித சேனாரட்ண, இல்லை, அநேகமானோர் கூறினார்கள். எங்களையும் கூறுமாறு, நான் யாரும் கூறுவதை கூறத் தயாரில்லை. போவதா போவதில்லையா என்பதல்ல பிரச்சினை நாட்டை மேம்படுத்துவதா இல்லையா என்பது மாத்திரமே.

நான் அரசியலுக்கு வைத்தியத் தொழிலிலிருந்தே விலகி வந்தேன். வர்த்தகத்திலிருந்தும் விலகினேன். இன்று எனது வருமானம் சம்பளம் மாத்திரமே. அனைத்தையும் மூடிவிட்டு இங்கு வந்தது அதையும் இதையும் சொல்வதற்கல்ல. எனக்கு ஆத்ம பலம் உண்டு. அதுபோன்று எனக்கு அரசியல் கொள்கையும் உண்டு. அதன்படியே நான் முடிவெடுப்பேன். ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 40 பேர் செல்வார்களென கதையொன்று உண்டல்லவா? அவர் போகிறார் இவர் போகிறாரென உறவினர்கள் வீடுகளுக்கா செல்கிறோம். இது அரசியல் முடிவு. ஜனாதிபதி பொருளாதாரத்தை மீட்பாரென உங்களுக்குத் தெரிகிறதா?


ஆம் தெளிவாக அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாம் குருடர்களா? முழு இலங்கையிலும் நாங்கள் சந்திக்கும் அனைவரும் மனிதர்கள் கூறுவதை விடுத்து நாம் மாத்திரம் வேறு கட்சியென்று விமர்சனம் செய்வார்களானால் அதனை மாக்ஸிஸவாதிகளுக்கு மாத்திரமே செய்ய முடியும். தற்போது வரிசையுள்ளதா? எரிபொருள் விலை மெல்ல மெல்ல குறைகிறது. எரிவாயுவுக்கு வரிசை இல்லை. நேற்று முன்தினம் எரிவாயுவின் விலையும் 1000 ரூபாவால் குறைந்துள்ளது. மொட்டுக் கட்சி ஏற்படுத்திய நிலைமையிலிருந்து ரணில் விக்கிரமசிங்க எனும் தலைவர் நாட்டை மீட்டுள்ளார் என்றார். (TK)


No comments