மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தினால் குறைக்க வேண்டும் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பெறுமதி வீழ்ச்சி, எரிபொருள் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் இந்த கட்டணக்குறைப்பு மே மாதம் அமுலாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக இலங்கை மின்சார சபை ஆராய்ந்து வருவதாக அதன் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குழு ஒன்றின் ஊடாக ஆராயப்பட்டு, தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.(AV)
No comments