ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய தேசிய கட்சியையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சியொன்று முன்னாள் அமைச்சர்களான மனோகணேசன் மற்றும் ரவுஃப் ஹக்கீம் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.
இதனை தமது டுவிட்டர் பதிவொன்றில் முன்னாள் அமைச்சர் மனோகணேசன் உறுதி செய்துள்ளார். ஆயினும் ஐக்கிய மக்கள் சக்தியின் தரப்பில் இது தொடர்பாக உரிய பதில் வழங்கப்படாத நிலையில், அந்த முயற்சி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மனோகணேசன் கூறியுள்ளார்.
அதேநேரம் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது, பிரதமர் பதவி குறித்த எந்த கலந்துரையாடலும் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளையும் மனோகணேசன் நிராகரித்துள்ளார்
No comments