திறந்த பல்கலைக்கழகத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இருந்து நீக்கி தனியான தனியார் பல்கலைக்கழகமாக பேணுவதற்கான சட்டமூலத்தை நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தயாரித்துள்ளதாக பல்கலைக்கழக பொது மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அப்துல்லா மொஹமட் ரிஃபாக் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி பாடத்திற்கு தொடர்பில்லாத நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தி குழுவொன்று நியமிக்கப்பட்டு இந்த சட்டமூலத்தை தயாரித்ததாகவும் தலைவர் தெரிவித்தார்.
உயர்கல்வித் துறை தொடர்பான இந்த வரைவு உயர்கல்வி அமைச்சர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரின் பங்களிப்பு இன்றி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் பல்கலைக்கழகத்தில் வெளிக் கட்சிகள் இவ்வாறு தலையிட முடியாது எனவும், இந்த சட்டமூலத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். (DC)
No comments