தனியார் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைக் கற்பதற்கான வட்டியில்லா கடன் திட்டத்தின் 7ஆவது கட்டத்திற்காக மாணவர்கள் இன்று(04) முதல் விண்ணப்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று(04) முதல் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 2019, 2020, 2021 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சைக்குத் தோற்றி, அதில் சித்தியடைந்த மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த வட்டியற்ற கடன் திட்டத்திற்கு www.studentloans.mohe.gov.lk எனும் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு 0703 555 970 அல்லது 0703 555 979 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கும் தொடர்புகொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (DC)
No comments