பிறைநிலா ஊடக வலையயைப்பு வழங்கும் புகைப்படத்துறைசார் பயிற்சிப் பட்டறை ஒன்று கடந்த சனி, ஞாயிறு தினங்களில் கண்டி, பொல்கொல்லையில் நடைபெற்றது. புகைப்படத்துறையில் ஆர்வமுள்ள பல இளம் புகைப்படக் கலைஞர்கள் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து பயன்பெற்றிருந்தனர்.
புகைப்டத்துறையை முறையாகக் கற்றுக் கொண்டால் அது அதிக வருமானம் ஈட்டும் சுயதொழில் என்பதை அறிந்து கொண்டே நாடுபூராகவும் இருந்து அநேக புகைப்படத்துறை ஆர்வளர்கள் இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டிருந்தனர்.
பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சப்ராஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளராக புகைப்படத்துறை பட்டதாரியும், புகைப்படத்துறையில் நீண்ட கால அனுபவமும், பயிற்சியுமுள்ள புகைப்படக் கலைஞர் திரு சீனு ராமதாஸ் கலந்து மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கியிருந்தார்.
முழுமையாக தமிழ் மொழியில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில்
Camera Types
Camera Daigram
Aperture, Shutter, ISO,
Exposed Meter
Depth of field
Focul Length
Exposure Mode
Focusing
போன்ற விடயங்கள் தெளிவாகக் கற்பிக்கப்பட்டதோடு ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக கமராக்கள் வழங்கப்பட்டு சுயமாக புகைப்படம் எடுக்கவும் கற்பிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் தொடர்ச்சியாக புகைப்படத்துறையில் அவர்கள் பயணிப்பதற்கான வழிகாட்டுதல்களும், அவர்களது தொழில் நடவடிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கவியல் விடயங்கள் தொடர்பிலும் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை புகைப்படங்கள் மூலம் கதை சொல்லும் விஷேட பயிற்சிகள் வழங்கப்பட்டதோடு ஒவ்வொரு குழுக்களும் புகைப்படங்கள் மூலம் மிகப்பெரிய கதைகளைச் சொல்லி முடிக்கும் குழு செயற்திட்டமும் இந்தப் பயிற்சிப் பட்டறையில் வழங்கப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.
இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்கள் இரண்டு நாள் பயிற்சியின் பின்னர் புகைப்படத்துறை சம்பந்தமான ஆரம்ப அறிவையும், கமரா தொடர்பான முக்கிய விடயங்களையும் அறிந்து கொண்டனர். பயிற்சிநெறி முடிவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இதேவேளை இந்தப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள முடியாமல் போன புகைப்படத்துறை ஆர்வளர்களுக்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் புகைப்படத்துறை தொடர்பான எமது நான்காவது பயிற்சிப் பட்டறை தமிழ் மொழியில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
எனவே பங்குகொள்ள விரும்பும் புகைப்படத்துறை ஆர்வளர்கள் பிறைநிலா ஊடக வலையமைப்பை தொடர்பு கொள்ளலாம். 077-3147675
No comments