அங்குருவத்தோட்ட பகுதியில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் இளம் பெண் மற்றும் அவரது கைக்குழந்தையின் சடலங்கள் ரத்மல்கொட வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுக்கு 24 வயது எனவும், குழந்தை 11 மாத கைக்குழந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் மேல் மாகாணத்தில் அமைந்துள்ள அங்குருவாதோட்டை ஊருக்குடாவ பிரதேசத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த பெண்ணும் அவரது கைக்குழந்தையும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை முடிந்து வீடு திரும்பிய பெண்ணின் கணவர் அவர்கள் காணாமற் போனதை அடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். (NW)
No comments