சட்டக்கல்லூரி சேர்க்கை கட்டணம் 15,000 ரூபாயாகவும், பரீட்சை கட்டணம் 1,200 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை நாடாளுமன்றத்தில் தெரிவித்ததுடன், உயர்தரப் பெறுபேறுகள் வெளியாகும் முன்னரே சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டமை தொடர்பில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வர்த்தமானியின் விதிமுறைகளுக்கு அமைய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டக் கற்கைகள் பேரவையுடன் நீண்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சட்டக்கல்லூரியானது சுமார் 5000 மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்கவுள்ளதாகவும், சட்டக்கல்லூரிக்கு அரசிடமிருந்து பணம் கிடைக்காது எனவும் நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(DC)
No comments