2023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இன்று (21) சபையில் அறிவித்தார்.
அதன் படி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மாற்றுத் திகதிகளை அடுத்த வாரம் அறிவிப்பார் எனவும் கல்வி அமைச்சர் சுசில் மேலும் தெரிவித்தார்.
இந்த வருட இறுதியில் நடத்த திட்டமிட்டிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒத்தி வைக்குமாறு விடுக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு மீண்டும் பிற்போட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார். (தினகரன்)
No comments