Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

சொன்னதை செய்யப்போகும் எலான் மாஸ்க் - சோகத்தில் சுந்தர் பிச்சை

 

டிவிட்டரில் தொடர்ந்து அதிரடி காட்டி வரும் எலான் மஸ்க் நினைத்தது விடவும் வேகமாக பேமெண்ட் சேவையை X தளத்தில் கொண்டு வர உள்ளார். எலான் மஸ்க் உருவாக்கிய X.COM தான் பின்னாளில் PAYPAL உடன் இணைந்து உலகின் மிகப்பெரிய பேமெண்ட் நிறுவனமாக மாறியது மூலம் எலான் மஸ்க்-கிற்கு இன்று வரை பேமெண்ட் துறை முக்கிய டார்கெட் ஆக இருக்கிறது.


இந்த நிலையில் டிவிட்டர் சிஇஓ லிண்டா சில மணிநேரத்திற்கு முன்பு வெளியிட்ட 2 நிமிட வீடியோவில் அடுத்த டிவிட்டரில் வர போவது என்பது தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சேட்டிங், வீடியோ கால் போன்ற பல விஷயங்கள் இருக்கும் வேளையில் பலரின் கவனத்தை ஈர்த்தது பேமென்ட் சேவை தான்.

டிவிட்டரில் விரைவில் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பேமெண்ட் சேவை அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. இது கட்டாயம் சர்வதேச அளவிலான பேமெண்ட் நெட்வொர்க்காக இருக்கும் என எளிதாக சொல்ல முடியும். இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் கிரியேட்டர்களுக்கான பேமெண்ட் மூலம் இதற்கான நெட்வொர்க்-ஐ எலான் மஸ்க் அமைத்து விட்டார்.


இதனால் டிவிட்டர் அதாவது X தளத்தில் கூகுள் பே சேவைக்கு இணையான ஒரு பேமெண்ட் நெட்வொர்க்-ஐ நாடுகள் அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ கொண்டு வரப்பட உள்ளது. இது சுந்தர் பிச்சையின் கூகுள் பே சேவைக்கு பெரும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கூகுள் பே இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகின் பல நாடுகளில் இயங்கி வருவதால் டிவிட்டரின் பேமெண்ட் சேவை சர்வதேச அளவில் பெரும் போட்டியாக இருக்கும். மேலும் டிவிட்டர் ஷாப்பிங் முதல் பல சேவைகளை இதில் கொண்டு வர திட்டமிட்டு இருக்கும் காரணத்தால் கூகுள் பே சேவையின் ஆதிக்கம் குறையவும் வாய்ப்பு உள்ளது


X என அழைக்கப்படும் டிவிட்டர் சமுக வலைத்தளத்தை ஒரு சூப்பர் ஆப் ஆக மாற்ற வேண்டும், அனைத்து தரப்பு மக்களும் முழுமையான கருத்து சுதந்திரம் பெற்ற வேண்டும் என்ற இலக்குடன் தான் சுமார் 44 பில்லியன் டாலர் கொடுத்து எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கினார்.


இந்த தடாலடி மாற்றத்தால் டிவிட்டரின் மதிப்பு தற்போது வெறும் 4 பில்லியன் டாலருக்கு மட்டுமே மதிப்பிடப்படுகிறது என கூறப்பாட்டாலும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும், பயன்பாடும் எலான் மஸ்க் வந்த பின்பு பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

எலான் மஸ்க் செய்த பல மாற்றங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது, குறிப்பாக சமீபத்தில் அறிமுகம் செய்த கிரியேட்டர்களுக்கான பேமெண்ட் தொகை, வீடியோ பதிவு, லைவ் வீடியோ போன்ற பல விஷயங்களுக்கு மத்தியில் தற்போது எலான் மஸ்க்-ன் கனவான பேமென்ட் சேவை கொண்டு வரப்பட உள்ளது.



No comments