ரஷ்ய உட்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு பிரித்தானியா இரகசிய சேவைகள் அமைப்பு, பயிற்சி அளித்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.
அணுமின் நிலையத்தை சேதப்படுத்த முயன்ற உக்ரேனிய இராணுவத்தின் முயற்சிகளை தமது பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் வெற்றிகரமாக செயற்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேநேரம் ஒவ்வொரு நாளும் ஆயிரம் முதல் ஆயிரத்து 500 ரஷ்யர்கள் இராணுவத்தில் சேர விருப்பம் தெரிவித்து வருவதாகவும் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரேனில் தனது இராணுவ முயற்சியை அதிகரிக்க ரஷ்யா புதிய கட்டாய அணி திரட்டலை மேற்கொண்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குறிப்பாக கடந்த ஆறு அல்லது ஏழு மாதங்களில், 2 இலட்சத்து 70 ஆயிரம் பேர் தன்னார்வ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர் என்றும் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். (AVN)
No comments