அரசாங்கம் கடந்த ஆண்டு இறுதிவரை பெற்றுக் கொண்ட மொத்த கடன் தொகை 27 டிரில்லியன் ரூபாவாகும் என அரசாங்க கணக்கு குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அரசாங்கத்தின் கணக்குகளில் கடன் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்தபோதும் சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதும் அந்த குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்க கணக்குக் குழுவில் அது தொடர்பில் தெரிவித்துள்ள கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி .சி. விக்ரமரத்ன;
கடந்த 2022 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு அமைய நிதி நிலை அறிக்கைகளில் காட்டப்பட்டுள்ள நிதி அல்லாத சொத்துக்கள் இரண்டு ட்ரில்லியன் ரூபாவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் முழுமையான திட்டங்களுக்காக செலுத்தப்பட்ட கடன்கள் அன்றைய நிலவரப்படி 8 ட்ரில்லியனாக காணப்படுவதாகவும் மொத்தக் கடன் 27 ட்ரில்லியன் ரூபா என்றும் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,கடன்கள் தொடர்பான விபரங்கள் உள்ளபோதும் சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் கிடையாது. அந்த வகையில் நாட்டின் சொத்துக்களின் மொத்த சேகரிப்பு எம்மிடம் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கணக்குக் குழுவில் கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, நாம் 8 பில்லியனை கடனாக பெற்றுள்ளோம்.
2 பில்லியனே சொத்துக்களாக காணப்படுகிறது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களுடன் சரியான கணக்கை நாட்டுக்கு எதிர்காலத்தில் வெளியிடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (தினகரன்)
No comments