ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ரன்களில் சுருண்டது. இந்த இலக்கை இந்திய அணி 6 புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் எட்டி சாதனை படைத்தது. இந்த நிலையில் இந்த வெற்றியை இந்திய அணி வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். உலகக்கோப்பை தொடருக்கு முன்பு ஆசிய அளவில் இந்திய அணி சாம்பியனாக உருவெடுத்து இருப்பது அவர்களின் உத்வேகத்தை பல மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும் உலகக்கோப்பை 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறுவதால் ரசிகர்களும் தற்போது புதிய நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதனால் உலககோப்பை தொடர் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கலாம்.
இந்த நிலையில் ஆசிய கோப்பை இறுதி போட்டியில் நினைத்ததை விட வெற்றி எளிதாக இந்திய அணிக்கு கிடைத்ததால் அதில் ஒரு கிக்கே இல்லாமல் இருந்தது. இந்திய வீரர்கள் கொண்டாட்டத்திலும் ஒரு பெரிய அலப்பறை எதுவும் இல்லை. ஆனால் வழக்கம் போல் விராட் கோலி மட்டும் தனது சேட்டையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.
பந்து போட்டுட்டு பவுண்டரி லைன் வரைக்குமா ஓடுறது.. சிராஜ் செய்த சேட்டை.. விராட் கோலி ரியாக்சன பாருங்க பரிசளிக்கும் விழாவுக்கு முன்பு ரோகித் சர்மா கிரிக்கெட் வர்ணனையாளரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த இந்திய வீரர்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று விராட் கோலி ஜடேஜாவை எட்டி உதைத்தார். உடனே அங்கு சிரிப்பலை உருவானது. ஜடஜாவை உதைத்ததும் அருகில் நின்று கொண்டிருந்த குல்தீப் யாதவும் விராட் கோலியை கட்டி பிடித்து சிரித்தார்.
No comments