ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. அதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்ற பெருமை இதுவாகும்.
இந்த நிலையில் இந்தூர் மைதானம் மிகவும் சிறியது என்பதால் இந்திய அணி வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் கபடி, கதகளி என அனைத்தையும் விளையாடினார்கள்.
எப்படி போக்கிரி படத்தில் வடிவேலு both police and rowdy playing basket ball in my life என்று சொல்வாரோ, அதே போல் இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் ஆகிய மூன்று பேருமே ஆஸ்திரேலிய பவுலர்கள் வாழ்க்கையில் பாஸ்கெட் பால் விளையாடிவிட்டார்கள். ஆனால் ரசிகைகளிடமிருந்து முத்தம் கிடைத்ததோ இந்த மூன்று வீரர்களுக்குமே இல்லை.
ஒரு பக்கம் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 90 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் கில் நடப்பாண்டில் மட்டும் ஏழு சதங்களை அடித்து அசத்தியிருக்கிறார். அவருடைய இன்னிங்சில் நான்கு சிக்ஸர்களும், ஆறு பவுண்டரிகளும் அடங்கும். இன்னொரு பக்கம் சூரியகுமார் யாதவ் தனது உயிரைக் கொடுத்து 37 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார் .இதில் ஆறு பவுண்டரிகளும் ஆறு சிக்ஸர்களும் அடங்கும்.
ஆனால் வெறும் ஒன்பது பந்துகளைப் பிடித்து ஒரு பவுண்டரிகளை அடித்து 13 ரன்கள் சேர்த்த ஜடேஜாவுக்கு தான் ரசிகர்களிடமிருந்து முத்தம் கிடைத்தது. ஜடேஜா பவுண்டரி ஒன்றை அடித்தவுடன் மைதானத்தில் இருந்த இளம் பெண்கள் இருவர் ஜடேஜாவை நோக்கி கையால் முத்தம் கொடுத்து நடனம் ஆடினார்கள். இது அங்கிருந்த கேமராவில் பதிவானது.
இதை பார்த்து ரசிகர்களும் பொறாமை பட்டனர். அங்கு மூன்று பேர் உயிரைக் கொடுத்து விளையாடினால் அது என்ன ஜடேஜாவுக்கு மட்டும் தனியாக முத்தம் கொடுக்கிறீர்கள் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுத்த சிலர் சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் என்றால் அப்படித்தான் என்று பதிவிட்டு இருக்கிறார்கள். மேலே சொன்ன மூன்று வீரர்களை விட ஜடஜாவுக்கு வயது கூட என்றாலும், இன்னும் கன்னிப்பெண்களின் உள்ளத்தில் கையெழுத்தை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.
No comments