Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

இந்திய அணிக்கு அச்சுறுத்தல் - ரோஹித் உஷார்

 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் இந்திய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என விமர்சகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அவர்கள் இருவருக்கும் எதிராக பேட்டிங் ஆட முன்பே திட்டமிட வேண்டும் எனவும் கூறினர்.


இந்தப் போட்டியில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில், இந்திய அணி பேட்டிங்கில் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்த நிலையில்தான் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஆடம் ஜம்பா மற்றும் மிட்செல் ஸ்டார்க் முக்கிய பங்கு வகிப்பார்கள் என கூறப்படுகிறது. மிட்செல் ஸ்டார்க் நீண்ட காலத்திற்கு பின் ஒருநாள் போட்டியில் ஆட இருக்கிறார். கடைசியாக அவர் கடந்த ஜூன் மாதம் ஆஷஸ் தொடரில் பங்கேற்றார். அதற்கு முன் 2023இல் இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்று இருந்தார்.

அதில் முதல் போட்டியில் அவர் 5 விக்கெட்களை சாய்த்து இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தார். அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் சரியாக பந்து வீசவில்லை.


ஆனால், இப்போது காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் அவர் முன்பு 5 விக்கெட் வீழ்த்தியது போல தனி ஆளாக இந்திய அணியை சாய்க்கும் வாய்ப்பு உள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். அதாவது விக்கெட் எடுத்தால் மொத்தமாக 4 அல்லது 5 விக்கெட்களை சாய்ப்பார். இல்லையெனில் ஒரு விக்கெட் கூட இருக்காது.


மறுபுறம் சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு நடுவே பந்து வீசுவார். அதனால், அவர் பந்துவீச்சில் அடித்து ஆட ஆசைப்படும் இந்திய வீரர்கள் ஆட்டமிழக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவர் பந்தை அதிகமாக சுழல வைக்கும் ஆற்றல் பெற்றவர்.

மேலும், இந்திய அணிக்கு எதிராக மிக சிறப்பாக பந்து வீசி உள்ளார். அதிக விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அவர் இந்திய அணிக்கு எதிராக 19 ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். அவரது எகானமி 5.56. இந்திய மண்ணில் 14 போட்டிகளில் 24 விக்கெட்கள் வீழ்த்தி இருப்பதும் கவனிக்கத்தக்கது. இவர் கொஞ்சம் ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட் வீழ்த்துவதில் கில்லாடி என்பதால் இந்திய வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.



No comments