Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

"மரண அடி வாங்கினாலும் எழுவோம்" கெத்தாக பேசிய இலங்கை அணித் தலைவர்

இந்திய அணி 50 ரன்களுக்கு இலங்கை அணியை சுருட்டி வீசி ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.


இந்தப் போட்டியில் இலங்கை அணி வெறும் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து இருந்தது. அடுத்ததாக 6.1 ஓவரில் இந்திய அணியும் 51 ரன்கள் என்ற எளிய இலக்கை ஊதித் தள்ளி விட்டது. இலங்கை அணிக்கு ஆறுதலுக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை.


இலங்கை ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் இந்தப் போட்டியை நேரில் காண வந்து பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இலங்கை அணி நிச்சயம் மனம் உடைந்து இருக்கும். ஆனாலும், அந்த அணியின் கேப்டன் தசுன் ஷனகா போட்டிக்கு பின் பேசுகையில், பெரிய தோல்வி குறித்து அலட்டிக் கொள்ளாமல், எந்த வீரரையும் குறை சொல்லாமல் தெளிவாக பேசினார்.


அவர் கருத்துத் டத்தெரிவிக்கையில்  "சிராஜ் இன்று மிகச் சிறப்பான பவுலிங் காட்சியை காட்டினார். அவர் இந்தப் போட்டியை அணுகிய விதத்திற்கு அவரை பாராட்டியே ஆக வேண்டும். இந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என நான் எண்ணினேன். ஆனால், புறச் சூழ்நிலைகள் பெரிய அளவில் இந்த நாளை கடினமானதாக மாற்றி விட்டது. நாங்கள் எங்கள் செயல்பாட்டை மாற்றி இருக்கலாம். இன்னும் எங்கள் பேட்டிங் டெக்னிக்கை இறுக்கமாக மாற்றி, மிடில் ஓவர்கள் வரை தாக்குப் பிடித்து பின் ரன் சேர்த்து இருக்கலாம்.


ஆனால், இந்த தொடரில் நல்ல விஷயம் என்றால் சதிரா சமரவிக்ரமா, குசால் மென்டிஸ் மிடில் ஓவர்களில் ஸ்பின் பந்துகளில் நன்றாக ரன் குவித்து இருக்கிறார்கள். அசலங்கா அழுத்தமான நேரங்களில் நன்றாக பேட்டிங் செய்துள்ளார். இந்திய சூழ்நிலையில் (உலகக்கோப்பையில்) இவர்கள் மூவரும் நன்றாக ரன் குவிப்பார்கள். எங்கள் பந்துவீச்சாளர்களும் உலகக்கோப்பையில் நன்றாக செயல்படுவார்கள் என நான் நம்புகிறேன். 5 முக்கிய வீரர்கள் இல்லாமல் நாங்கள் நல்ல அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டி வரை வந்திருக்கிறோம். நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்கே துவங்கினோமோ, அந்த வகையில் இது நல்ல முன்னேற்றம். பெரிய அளவில் இந்தப் போட்டியைக் காண வந்த எங்கள் ரசிகர்களுக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். உங்களை ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கிரிக்கெட் வீரர்களாக நாங்கள் உங்கள் மீது அன்பு வைத்துள்ளோம். அவர்கள் விளையாடும் சிறப்பான கிரிக்கெட்டுக்காக இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்." என்றார்.



No comments