Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

உலகக் கோப்பை அணியில் அஷ்வின் இடம்பிடிப்பாரா? ரோஹித் ஷர்மாவின் கையில் முடிவு

உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் ரவிச்சந்திரன் சேர்க்கப்படுவாரா என்பது இன்று மாலை தெரிய வரும் என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஃபீவர் தீவிரமாகி வருகிறது. அக்.5ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர், நவ.19ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக 9 அணிகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்களும் இந்தியா குவிந்துள்ளனர். நேற்றே பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் இந்தியா வந்துவிட்டன.


இதனிடையே உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நாளை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் மாற்றங்களை செய்ய இன்றே கடைசி நாளாகும். ஐசிசி விதிமுறைப்படி உலகக்கோப்பை அணியில் எந்த அணிகள் மாற்றம் செய்ய விரும்பினாலும் இன்றே அறிவிக்க வேண்டும்.


அந்த வகையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்று மாலை தான் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள 15 வீரர்கள் உறுதி செய்யப்படவுள்ளனர். ஏனென்றால் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் இடதுகை விரல்களில் காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார்.



இவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார். பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், பந்துவீச்சில் தனது அனுபவத்தையும் திறமையையும் முழுமையாக வெளிப்படுத்தினார். அதேபோல் அக்சர் படேலின் காயம் குறித்து இதுவரை எந்த விளக்கமும் இந்திய அணி நிர்வாகம் தரப்பில் கூறப்படவில்லை.


அதேபோல் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கவுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் இடதுகை பேட்ஸ்மேன் அதிகம் என்பதோடு, சேப்பாக்கம் மைதானம் ஆஃப் ஸ்பின்னருக்கு சாதகமாக அமையும். இதனால் அக்சர் படேல் வரும் வரை அஸ்வின் அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் முதல் போட்டியில் அஸ்வின் களமிறங்கவும் அதிக வாய்ப்புகள் இருப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.



No comments