கிழக்கு மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் கணினி முறை வலையமைப்பை புதுப்பிக்கும் நோக்கில் இன்று புதன்கிழமை (27) முதல் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதிவரை வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக, அம்மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஐ.எம்.றிகாஸ் அறிவித்துள்ளார்.
இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சகல கருமபீடங்களும் மூடப்படுவதாகவும், அவர் தெரிவித்தார்.
வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தற்போதுள்ள செயலிக்கு பதிலாக புதிய செயலியை உருவாக்கும் நடவடிக்கை முடிவடைந்துள்ளதாகவும் இந்த புதிய செயலியின் உதவியுடன் ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் இந்த செயற்பாடு மீண்டும் ஆரம்பிக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, குறிப்பிட்ட காலப்பகுதிக்கு உரித்தான தாமதக் கட்டணம் அறவிடுவதை இன்று (27) முதல் ஒக்டோபர் 6ஆம் திகதிவரை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பொதுமக்களுக்கு அவர் அறிவித்துள்ளார்.
ஏறாவூர் சுழற்சி, ரொட்டவெவ குறூப் நிருபர்கள் (தினகரன்)
No comments