Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

"எந்த அணியும் இந்தியாவை நெருங்கவில்லை" - முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்

6 அணிகள் பங்கேற்ற 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்திய இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.


இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இதில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 8 வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இந்நிலையில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், 'இது மிகவும் உறுதியான வெற்றி. ஏனெனில், ஆசிய கோப்பையில் வங்காளதேசத்தைத் தவிர எந்த அணியும் இந்திய அணிக்கு நெருக்கமாக வரவில்லை என்று நினைக்கிறேன். உலகக் கோப்பைக்கு முன்பு இந்த மாதிரியான வெற்றியைப் பெற்றிருப்பது இந்திய அணிக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். இது மிகவும் நன்றாக இருக்கிறது. குறிப்பாக இலங்கைக்கு எதிராக நாம் கண்ட வேகமான வெற்றி' என பாராட்டியுள்ளார்.





No comments