Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

முஹம்மத் ஸைத்க்கு பஹத் பின் ஜலாவி அவர்களிடமிருந்து பாராட்டு

 


சவூதி அரேபியாவின் தாயிப் நகரில் உலகின் மிகப்பெரிய ஒட்டகத் திருவிழாவான பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழா கடந்த ஜுலை 07ம் திகதி  ஆரம்பமானது.

இம்முறையும் போட்டிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டதோடு சுமார் 350 போட்டிகள் கொண்ட ஆரம்ப கட்டங்களுடன் போட்டிகள் நடாத்தப்பட்டன.


ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த இப் போட்டி நிகழ்ச்சியில் காணொளி வடிவமைப்பாளராகவும், புகைப்படக் கலைஞராகவும் கடமையாற்றிய இலங்கை கொட்டராமுல்லை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் ஸைத் (Mohamed Zaidh) வழங்கிய சேவையைப் பாராட்டி சவூதி அரேபிய இளவரசர் ஃபஹத் பின் ஜலாவி அவர்கள் ஸைதின் சேவையைப் பாராட்டி சான்றிதழும், சின்னமும் வழங்கி கௌரவித்தார்.

இந்த பட்டத்து இளவரசர் ஒட்டகத் திருவிழாவை பார்வையிட சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதரவர் பக்கீர் அம்சாவும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments