Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

உக்ரேயினுக்கு ஆயுதங்கள் வழங்கப்போவதில்லை - போலந்து அறிவிப்பு

போலந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே தானிய ஏற்றுமதி பற்றிய சர்ச்சை மோசமடையும் நிலையில் போலந்து இந்த முடிவை எடுத்துள்ளது.

நவீன ஆயுதங்களுடன் தனது ஆயுத வளத்தைப் பெருக்கிக்கொள்ள விரும்புவதாக போலந்து பிரதமர் கூறினார்.


ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி முன்வைத்த கருத்தைப் பற்றிப் பேச உக்ரைனியத் தூதருக்குப் போலந்து அழைப்பு விடுத்தது.


சில நாடுகள் உக்ரைனுடன் போலியான நட்புறவைக் கொண்டுள்ளதாக ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.

அது நியாயமற்ற கருத்து என்று கூறிய போலந்து, போர் ஆரம்பித்த நாளிலிருந்து உக்ரைனுடன் தான் துணைநின்றதை நினைவுகூர்ந்தது. ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்த பின் வர்த்தகப் பாதைகளில் சிக்கல் ஏற்பட்டது.


உக்ரைனிலிருந்து வெளியேறிய பெரிய அளவிலான தானியச் சரக்குகள் மத்திய ஐரோப்பாவைச் சென்றடைந்தன.


அது உள்நாட்டு தானிய விலையைக் குறைப்பதாக சில நாடுகளின் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். அதன் விளைவாகப் போலந்து உள்ளிட்ட 5 நாடுகளில் தானிய இறக்குமதிக்கு ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகத் தடை விதித்தது.

மத்திய ஐரோப்பிய நாடான போலந்து உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (தினகரன்)


No comments