Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை வெளியீடு

2023 இல் நடத்தப்படவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி பரீட்சை நடவடிக்கைகள் நிறைவுபெறும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதே வேளை 2022 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றி 2023 ஆம் ஆண்டு மீண்டும் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கிணங்க இந்த மாதம் 16ஆம் திகதிக்கு முன்பதாக அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. (தினகரன்)




No comments