Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

இம்ரான் கான் தேர்தலில் களமிறங்குவாரா? - பாகிஸ்தானில் பொதுத்தேர்தல்

பாகிஸ்தானில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் பொதுத் தேர்தல் நடக்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையகம்  அறிவித்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 90 நாட்களில் தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை என்பதால் ஜனவரி மாதம் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


அண்மையில் பாராளுமன்றத்தை கலைக்க, அப்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரை செய்தார். இதை ஏற்று பாராளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.


பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் இன்னும் 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.


ஊழல் வழக்கில், இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார்.


தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராகும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. இடைக்கால பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் இருந்து வருகிறார்.

அந்நாட்டில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக்கே இன்ஸாஃப் கட்சியும், ஷெபாஸ் ஷரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் பிலாவால் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் பிரதான கட்சிகளாக உள்ளன.


அந்நாட்டின் தொகுதி சீரமைப்புக்கான முதல் பட்டியல் இம்மாதம் 27 அன்று வெளியிடப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சம்பந்தபட்டவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்ட பின் இறுதி பட்டியல் நவம்பர் 30 அன்று வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


இதற்கு பின்னர் 54 நாள் தேர்தல் பணிகள் நடைபெற்று ஜனவரி கடைசி வாரம் தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. (தினகரன்)


No comments