கொள்ளுப்பிட்டியில் பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இருந்து தெனியா நோக்கி பயணித்த பஸ் மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் மரம் முறிந்து விழுந்ததில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தானது இன்று (06) காலை 6.00 மணியளவில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளது
கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு அனர்த்தத்தில் சிக்கியுள்ளது.
விபத்து காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதாகவும், டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் மாற்று வழியை பயன்படுத்துமாறும் வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
No comments