அநுராதபுரம் மாவட்டத்தில் 2023/24 ஆம் ஆண்டு பெரும்போக செய்கையின்போது உழுந்து மற்றும் பயறுச் செய்கையை விஸ்தரிப்பதற்காக அரசாங்கத்தினால் 7.92 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட விவசாய பணிப்பாளர் எச்.எல்.தேனுவர தெரிவித்தார்.
அநுராதபுரம் அரசாங்க அதிபர் அலுவலக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட விவசாயக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அநுராதபுரம் மாவட்டத்தின் 22 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இம்மாதம் தேவையான உழுந்து மற்றும் பயறு நடுகைக்குரிய விதைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பயிர்செய்கையில் ஈடுபடும் பயனாளிகளின் பெயர் விபரங்கள் திரட்டப்பட்டு அவர்களுக்கு தேவையான விதையினை வழங்க கமநல சேவைகள் மத்திய நிலையங்கள் ஊடாக தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்குரிய ஆலோசணை வழங்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
No comments