அவசர அடிப்படையிலான மருந்துக் கொள்வனவு முறைமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று (02) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவசர அடிப்படையிலான ஒரு சில மருந்துக் கொள்வனவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் இதனை அறிவித்துள்ளார். (தினகரன்)
No comments