Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

பாகிஸ்தான் வீரர்களுக்கு கடும் தொனியில் பேசிய வசீம் அக்ரம் - இதுதான் சங்கதி


பல பாகிஸ்தான் அணி வீரர்கள் உடற்தகுதியுடன் இல்லை என்றும், அதன் காரணமாகவே உலகக்கோப்பை போட்டிகளில் பீல்டிங்கில் மோசமாக செயல்படுவதாகக் கூறி கடுமையாக விளாசி இருக்கிறார் வாசிம் அக்ரம்.


அது மட்டுமின்றி, பாகிஸ்தான் வீரர்கள் அதிக அளவில் ஆட்டுக் கறி உண்பதாக பரபரப்பு தகவல் ஒன்றையும் கூறி மிரள வைத்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. அதற்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தது. மொத்தம் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள பாகிஸ்தான் அணி, அனைத்து போட்டிகளிலும் பீல்டிங்கில் மோசமாக சொதப்பி இருந்தது. இதை அடுத்து பாகிஸ்தான் அணி வீரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்தகுதி தேர்வு செய்யவில்லை என்ற உண்மை வெளியாகி இருந்தது.


இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 282 ரன்கள் குவித்தும் தோல்வி அடைந்து இருந்தது பாகிஸ்தான் அணி. ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட் மட்டுமே இழந்து 283 ரன்கள் வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. ஆனால், அதைவிட பீல்டிங் மோசமாக இருந்தது. அதன் காரணமாகவே ஆப்கானிஸ்தான் அணிக்கு பல பவுண்டரிகள் கிடைத்தன.


இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வீரர்களின் உடற்தகுதியை பற்றிய உண்மையையும், அவர்கள் ஒரு நாளைக்கு எட்டு கிலோ ஆட்டுக் கறி உண்கிறார்கள் என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார் வாசிம் அக்ரம்.


"இன்று மிகப் பெரிய அவமானம் நடந்தது. 280 ரன்கள் இலக்கை வெறும் 2 விக்கெட் மட்டும் இழந்து எட்டுவது என்பது மிகப் பெரிய விஷயம். பிட்ச்சை குறை கூறுவதை விட பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங்கை பாருங்கள். அவர்களின் உடற்தகுதியை பாருங்கள். இந்த வீரர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடற்தகுதி சோதனையிலேயே பங்கேற்கவில்லை நாங்கள் மூன்று வாரங்களாக கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டு இருக்கிறோம். நான் தனித்தனியாக வீரர்களின் பெயர்களை கூறினால் அவர்கள் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு செல்ல வேண்டிய நிலை வரும். இந்த வீரர்கள் தினமும் எட்டு கிலோ ஆட்டுக் கறி உண்கிறார்கள் போல தெரிகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தக் கூடாதா?" எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார் வாசிம் அக்ரம்.

பாகிஸ்தான் அணி வட்டாரத்தில் இருந்து வந்த தகவல்களை வைத்து வாசிம் அக்ரம், பாகிஸ்தான் வீரர்கள் ஒரு நாளைக்கு எட்டு கிலோ ஆட்டுக் கறி உண்கிறார்கள் என கூறி இருப்பதாக தெரிகிறது. 15 வீரர்களுக்கு எட்டு கிலோ கறி என்றாலும், ஒரு வீரருக்கு ஒரு நாளைக்கு அரைக் கிலோ கறி அளிக்கப்படுவதாக நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், இது முற்றிலும் உண்மையா அல்லது வாசிம் அக்ரம் உணர்ச்சி வேகத்தில் பாகிஸ்தான் வீரர்களை விமர்சனம் செய்வதற்காக அதிக அளவைக் குறிப்பிட்டு இருக்கிறரா என்பது தெரியவில்லை. முன்னதாக பாகிஸ்தான் வீரர்கள் ஹைதராபாத்தில் ஒரு உணவகத்தில் அசைவ உணவுகளை அதிகமாக உண்ட போது, பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் வீரர்கள் அதிக எடை போட்டு விடுவார்களோ என அஞ்சி குறைவாக சாப்பிடுமாறு வீரர்களை கேட்டுக் கொண்ட சம்பவம் நடந்தது. அதை பாகிஸ்தான் அணி வீரர் ஷதாப் கான் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.



No comments