நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு விதமான கண் நோய் பரவி வருவதாகவும் அது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் சுகாதார அமைச்சு பொதுமக்களை கேட்டுள்ளது.
கொன்ஜுன்க்டிவிடிஸ் எனப்படும் இந்த கண் நோய் ஒருவகை வைரசால் ஏற்படுகின்றது. கண்களில் வலி, கண்ணீர், கண்கள் சிவத்தல், கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் இந்த நோய்க்கான அறிகுறி என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நோயானது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மிக எளிதில் பரவக்கூடியது என்றும் நோயாளியான நபரின் கண்ணீர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுரப்பிக்களால் மட்டுமே, அது பரவுவதாகவும் விஷேட கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சில பாடசாலைகளிலும் இந்த நோய் பரவல் இடம் பெற்றுள்ளதாகவும், தற்போது நாட்டில் நிலவும் வானிலையுடன் இந்த நோய்க்கு தொடர்புள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரம் கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் மத்தியில் இந்த நோய்க்காணப்பட்ட து. கடந்த ஆறு மற்றும் ஏழாம் திகதிகளில் சுமார் 40 மாணவர்களுக்கு இந்த நோய் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கிணங்க நோய் பரவும் பாடசாலைகளில் குறித்த வகுப்புகளை நடத்த வேண்டாமென, மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments