2022/2023 ஆம் கல்வி ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பு பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் பரீட்சையில் 394,450 பாடசாலை பரீட்சார்த்திகளும் , 78,103 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக சேர்த்து மொத்தம் 472,553 மாணவர்கள் பரீட்சைக்கு தொற்றியிருந்தனர்.
3568 பரீட்சை நிலையங்களிலும், 536 இணைப்பு நிலையங்களிலும் க.பொ. த. சாதாரண தர பரீட்சை இடம் பெற்றிருந்தது,
இதுவரையில் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிடாதவர்கள் இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதேவேளை உரிய பாடசாலை பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்து கொள்ள பாடசாலையின் அதிபர்கள் தரப்பட்டுள்ள பயனர் பெயர், கடவுச் சொல் என்பவற்றை பயன் படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பரீட்சையின் மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 04.டிசம்பர் 2023 முதல் 18.டிசம்பர் 2023 வரையான காலப்பகுதியில் கோரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் விசாரணைகள் இருப்பின் 1911 எனும் இலக்கத்திற்கு நேரடித் தொடர்பை ஏற்படுத்துமாறு பரீட்சார்த்திகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
No comments