Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து தோற்கலாம் - காரணம் கசிந்தது

ஐசிசி உலக கோப்பை முதல் அரை இறுதி போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த இந்தியாவும் நியூசிலாந்து அணியும் பல பரிட்சை நடத்துகின்றன.


 நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கடந்த சில போட்டிகளாக உலகக்கோப்பை தொடரில் எளிதாக இந்தியாவை வீழ்த்தி வருகிறது. இதனால் இம்முறையும் இந்தியாவை வீழ்த்தி விடலாம் என்று அந்த அணி ரசிகர்கள் பெரிதும் நம்புகின்றனர். ஆனால் கடந்த முறை இந்தியா இருந்த நிலையும் இம்முறை தற்போது இந்தியா இருக்கும் நிலையும் வெவ்வேறு ஆகும். இந்த நிலையில் இம்முறை நியூசிலாந்து ஏன் தோற்கும் என்று ஐந்து காரணங்களை பார்க்கலாம்.

கடந்த முறை நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் போட்டி வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நடைபெற்றது. ஆனால் இம்முறை சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் தான் போட்டி நடைபெறும். இதனால் ட்ரெண்ட் பவுல்ட் மற்றும் லோகி பெகுர்சன், டிம் சவுதி போன்ற வீரர்கள் எல்லாம் அபாயகரமானவர்களாக இருக்க மாட்டார்கள். 


இதேபோன்று நியூசிலாந்தின் பேட்டிங்கும் ஒரு சில வீரர்களை நம்பியே இருக்கிறது. அவர்களை எளிதில் வீழித்து விட்டால் நியூசிலாந்து அணி தடுமாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் நியூசிலாந்து அணி கீழ் வரிசை வீரர்களும் தற்போது பார்மில் இல்லாமல் தவித்து வருகிறார்கள். அது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம். மேலும் இந்த தொடரில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திர தவிர வேறு யாரும் சுழற் பந்துவீச்சை அவ்வளவு சுலபமாக விளையாடுவதில்லை. இதனால் இந்திய அணியின் சுழற் பந்து வீச்சு தாக்குதலை எதிர்கொள்வது நியூசிலாந்துக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும்.


இதேபோன்று லீக் சுற்றில் இந்தியாவுடன் அடைந்த தோல்வி நியூசிலாந்து மனதில் நிச்சயம் இருக்கும். இந்திய அணி தோல்வியை தழுவாமல் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. ஆனால் நியூசிலாந்து அணி தொடர்ந்து சமீப ஆட்டங்களில் தோல்வியை தழுவியது.


அவர்கள் மனதில் நிச்சயம் சந்தேகங்களை ஏற்படுத்தும். அவர்களுடைய உத்வேகமும் குறைந்திருக்கும். நம்பிக்கை பாதிக்கப்பட்டிருக்கும். நியூசிலாந்து வீரர்களுக்கு இருக்கப் போகும் மிகப்பெரிய சவாலே மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய ரசிகர்கள் முன் விளையாடுவது தான். இந்திய ரசிகர்கள் கூச்சல் போடுவது,

நியூசிலாந்துக்கு எதிராக குரல் கொடுப்பது போன்ற சம்பவங்கள் நியூசிலாந்து வீரர்களுக்கு தேவையில்லாத நெருக்கடியை ஏற்படுத்தும். இதனால் நியூசிலாந்து தோல்வி அடையவே நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.



No comments