Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

இந்தியா தோற்றதுக்கு காரணமே இது தான் என்கிறார் பாகிஸ்தான் வீரர் சுஹைப் மலிக்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பவுண்டரி அடித்து இருந்தது. ஆஸ்திரேலிய அணி தெளிவாக போட்ட திட்டம் ஒன்றே இந்திய அணியால் பவுண்டரி அடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் என அந்த திட்டத்தை விவரித்து இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்.


இந்த இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த போது ரோஹித் சர்மா களத்தில் இருந்த வரை மட்டுமே இந்திய அணி அதிக பவுண்டரிகளை அடித்தது. ரோஹித் சர்மா மட்டும் நான்கு ஃபோர், மூன்று சிக்ஸ் அடித்தார். அவர் களத்தில் இருந்த போது விராட் கோலி நான்கு ஃபோர் அடித்தார். ரோஹித் ஆட்டமிழந்த பின் கோலி, ராகுல் மிக நிதான ஆட்டத்துக்கு மாறினார்கள். அவர்களால் நீண்ட நேரத்திற்கு ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.



97 பந்துகள் கழித்தே ஒரு பவுண்டரி அடிக்கப்பட்டது. அதன் பின்னும் நீண்ட நேரம் பவுண்டரியே இல்லாமல் ஆடியது அணி. சுமார் 29 ஓவர்களில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டு இருந்தது.


இந்தியா மொத்தமாக 13 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தது. ஆனால், சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் மட்டுமே 15 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு இந்திய அணி பவுண்டரி அடிக்காமல் போகக் காரணமே ஆஸ்திரேலிய அணி நேராக பவுண்டரி அடிக்க விடாமல் தங்கள் பீல்டிங்கை பலப்படுத்தியது தான் எனக் கூறி இருக்கிறார் சோயப் மாலிக்.


போட்டி நடந்த மைதானத்தில் பவுண்டரி எல்லைகள் நீள் வட்டத்தில் இருந்ததால் அதை ஆஸ்திரேலியா சரியாக பயன்படுத்தியதாகவும், ஆனால், இந்திய அணி தன் சொந்த மண்ணிலேயே சூழ்நிலைகளை சரியாக புரிந்து கொள்ளவில்லை எனவும் கூறி இருக்கிறார் அவர்.


இது குறித்து சோயப் மாலிக் கூறுகையில், "இந்தப் போட்டி நடந்த மைதானம் நீள் வட்ட அளவில் பவுண்டரிகளை கொண்டு இருந்தது. ஆஸ்திரேலியா அந்த பவுண்டரி எல்லைகளை சரியாக பயன்படுத்தியது. அவர்கள் நேராக வந்து பவுண்டரி அடிக்க முடியாது. வேண்டுமானால் ஸ்கொயர் திசையில் அடித்துக் கொள்ளுங்கள் என சவால் விட்டனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் வகை வகையாக பந்து வீசினார்கள். இந்தியர்களை விட சிறப்பாக இந்திய சூழ்நிலைகளை கணித்து, திட்டமிட்டு ஆடி இருக்கிறது ஆஸ்திரேலியா" என்றார்.




No comments